“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்துடன் இணைத்து இலங்கை பொலிஸாரினால் வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் இரண்டு போக்குவரத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்தத்தில் ஒலி சமிக்ஞை எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல வண்ண மின்விளக்குகளை பொருத்துதல், வாகனங்களில் சட்டவிரோதமாக பாகங்களை பொருத்துதல் தொடர்பாக கண்காணிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.
நேற்று சனிக்கிழமை (04) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வாகன சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.