வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியினை மின்சாரத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் மூலம் நீரினை அகற்றி துப்புரவு செய்யும் போது குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் த.காந்தரூபன் வயது 49 என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



