லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.
அதோடு இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது.