கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களையே தாக்கும் மாரடைப்பு தற்போது சிறு வயதில் உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்தது. விளையாட்டு மைதானத்தில் சக மாணவிகளுடன் 9 வயதான 3ம் வகுப்பு மாணவி மான்வி சிங்கும் விளையாடி கொண்டிருந்தார். விளையாடிக்கொண்டிருந்த போது மான்வி சிங் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக அவரை அவரது பெற்றோர்கள் வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு மாணவி இறந்ததாக மருத்துவர்கள் கூறியது மாணவியின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது.