+1 514-800-2610

ஏர் கனடா மற்றும் சன்விங் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களுக்கு எதிராக 3,000 முறைப்பாடுகள் திகைத்து நிற்கும்- கனேடியப் போக்குவரத்து நிறுவனம்!!

2020-02-27 14:45
கனடிய செய்திகள்

Image result for The Canadian Transportation Agency news

சமீபத்திய வாரங்களில் விமான பயணிகளிடமிருந்து 3,037 முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் பெரும்பாலான முறைப்பாடுகள் விமான தாமதம் அல்லது ரத்துக்கான காரணங்களை அவர்கள் துல்லியமாக விளக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர் அவற்றில் 3000 முறைப்பாடுகள் ஏர் கனடா மற்றும் சன்விங் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களுக்கு எதிராக வந்துள்ளதாகவும் 570 ஐ முறைப்பாடுகளை விசாரித்து வருவதாகவும் கனேடியப் போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 24, 2020 தேதியில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு கனேடிய போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) எழுதிய கடிதத்தில், "புதிய விமான பயணிகள் உரிமை சட்டத்திற்கு" அமைவாக டிசம்பர் 15, 2019 மற்றும் பிப்ரவரி 13, 2020 க்கு இடையில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து புகார்களையும் “விரிவான ஆய்வு” நடத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கனடிய மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது அப் புதிய விமான பயணிகள் உரிமை சட்டத்திற்கு அமைவாக , விமான தாமதங்கள் அல்லது விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் $ 1,000 வரை செலுத்த வேண்டும் மற்றும் ஒரு விமான நிறுவனம் இழப்பீட்டை மறுத்தால், அதற்கான காரணத்தை விளக்க அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் எனவும் தெரிவிக்கின்றது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், புதிய விதிமுறைகள், இழப்பீட்டை மறுக்கும் போது விமான நிறுவனங்கள் சரியான காரணங்களை வழங்கவில்லை என பல பயணிகள் தங்களது குழப்பத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி