Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழிலால் மீனவ குடும்பங்கள் பாதிப்பு – ரவிகரன் எம்.பி

ஏப்ரல் 10, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும் அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண் தலைமைத்துவத்துவ குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது

வடபகுதி மீனவக் குடும்பங்களின் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்
கட்டுப்படுத்துவதற்கும் கடற்றொழில் அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தவறினால் வடபகுதி மீனவ மக்கள் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதிப்பார்கள் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

உணவுப்பொருட்களுக்கான வரி குறைக்கப்படவேண்டும். குறிப்பாக அரிசி, சீனி, மா, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படவேண்டும்.

அதேவேளை, எனது மாவட்டத்திலும், வடமாகாணத்திலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென நினைக்கின்றேன்.

கிளீன் ஸ்ரீலங்கா எனச் சொல்லப்படுகின்ற விடயத்திற்கு மாறாக வடக்கு மாகாணத்திலே சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளின் மோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

முன்னைய அரசாங்கங்களின் காலங்களிலும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்திருந்தன.

இந்நிலையில், தற்போதைய புதிய அரசாங்கத்தின் காலத்திலாவது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் குறைவடையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகளே சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றார்களோ என நாம் எண்ணக்கூடியவாறிருக்கின்றது.

தற்போதைய மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் இலஞ்சம் பெற்று தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலை மாறவேண்டும். அதேவேளை முல்லைத்தீவைப் பொறுத்தவரையில் கசிப்பு, கஞ்சா, ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களின் ஊடுவல்கள் அதிகரித்திருக்கின்றன.

அத்தோடு இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு யார் காரணம்.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் கரிசனையோடு செயற்படவேண்டும். இல்லாவிட்டால் அரசிற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடவேண்டிய சூழல் ஏற்படும் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க இச் சபையிலே இருக்கும்போதே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் மேற்கொள்ளும் மாவட்டங்களாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் காணப்படுகின்றன.

இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சமாசமும், 34 மீனவ கூட்டுறவுச் சங்கங்களும், 3,847 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 4,642 மீனவர்களும், 215 மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும், 1,435 பதிவிலுள்ள படகுகளும், 720 பதிவில் இல்லாத படகுகளும் காணப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் 15000ற்கும் அதிகமான மீனவக்குடும்பங்களும், மொத்தமாக 4,620 படகுகளும், 5000ற்கும் அதிகமான மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும் காணப்படுகின்றன்றன.

மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

மீனவர்களின் கரவலைப்பாடுகள் இல்லாமல்போகின்றது. அதுமட்டுமல்ல சமூகச்சீர்கேடான விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவற்றைக் கண்டுகொள்ளாமல் மக்கள் நலன் சாராத இவ்வாறான திட்டங்கள் எமக்கு அவசியமானதா? என்பது சிந்திக்கவேண்டிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்

முந்தைய செய்தி அவுஸ்திரேலியாவில் புதிய நோய் கண்டுப்பிடிப்பு ….
அடுத்த செய்தி ஆயிரத்தை நெருங்கிய தேர்தல் விதி மீறல்கள் ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மூன்றாம் சார்லஸ் மன்னர் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு விஜயம்

ஏப்ரல் 1, 2026
இலங்கை

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். குழு மோதல் – இருவர் காயம்

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?