Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

ஜூலை 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான சரியான தகவல்கள் இதுவரையில் இல்லாத நிலையில், நாம் வேலை வாய்ப்புக்களை கோரும் போது தரவுகள் கைவசம் இருந்தாலே , வேலை வாய்ப்பை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

செப்டெம்பர் மாதமளவில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போட்டி பரீட்சை இன்றி நடைபெறவுள்ளதாகவும் அறிகிறோம், எனவே பட்டதாரிகள் பட்டப்படிப்பினை முடித்து வெளியேறிய ஆண்டு, அவர்களின் துறை சார்ந்த தரவுகள் கைவசம் இருந்தாலே வேலை வாய்ப்பினை சிக்கல் இன்றி பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் துறையிலும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சரியான தரவுகள் இல்லாததால் , சரியானவர்களை இனம் கண்டு அந்த வேலைவாய்ப்பினை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் வடமாகாண அபிவிருத்தி வேலை திட்டங்கள் ஊடாக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. பட்டதாரிகள் தொடர்பிலான தரவுகள் இருந்தாலே அவர்கள் சார்பான துறைக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்

எனவே வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்குக்கு நேரில் வந்து தமது பட்டப்படிப்பு தொடர்பிலான விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை, வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் நாம் வேலை கேட்டு போராட்டங்கள் நடத்தும் போது, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு கருத்துக்களை முன் வைப்போர், அன்றைய தினம் தந்தை செல்வா கலையரங்குக்கு வருகை தந்து எம்முடன் திறந்த கலந்துரையிடலில் ஈடுபடுங்கள்.

சிலரின் கருத்துக்கள் வேலையற்று இருக்கும் எமக்கு மிகுந்த மனவுளைச்சல்களை தந்திருந்தது.

எனவே சமூக ஊடங்ககளின் கருத்துக்களை முன் வைப்போர் , அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் , பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் திறந்த கலந்துரையாடலுக்கு அழைக்கின்றோம்.

எமது வேலையற்ற பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது , எதிர்காலத்திலும் இந்த பிரச்சனை தொடராது இருக்க என்ன செய்யவேண்டும். எமது கல்வியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன ? எமது பிரதேச வளங்களை நாம் எவ்வாறு ஆக்க பூர்வமாக பயன்படுத்தி எமது பகுதியை அபிவிருத்தி செய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான திறந்த கலந்துரையாடலை நாம் மேற்கொள்வோம்.

குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் இனிப்பை மொய்க்கும் எறும்புகள் போல, பிரச்சனைகளை மாத்திரம் தேடி ஓடாது, எக் காலத்திலும் போராட்ட களங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனையை தீர்க்க முயலவேண்டும். எமது திறந்த கலந்துரையாடலுக்கு எந்த பேதமுமின்றி அனைத்து தரப்பினையும் அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்
அடுத்த செய்தி நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்கம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு.

பிப்ரவரி 6, 2025
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியதாக குற்றசாட்டு!

செப்டம்பர் 10, 2025
1
இலங்கை

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர்

மார்ச் 5, 2025
அண்மைய செய்திகள்கனடா

மொன்றியல் வரை உணரப்பட்ட பாரிய விண்கல் வெடிப்பு! – 300 தொன் டிஎன்டி வெடிபொருளுக்கு இணையான ஆற்றல்

ஜூன் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?