வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை யாழில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த கடுகதி புகையிரதம், தோணிக்கல் ஆலடி புகையிரத கடவையில் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், கடந்தவாரம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
