Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சக தனியார் பேருந்து சாரதியுடன் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு காலவரையற்ற பணி தடை

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்து சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 08.04.2026 அன்று பேசாலை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டு இருந்த மற்றொரு தனியார் பேருந்தின்  சாரதியுடன் குறித்த தனியார் பேருந்து நடத்துனர் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபையால் ஆரம்பிக்கப் பட்ட விசாரணைகளில் குறித்த நடத்துனரின் ஒழுங்கீனமான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காலவரையற்ற பணித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிட படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றி தகுந்த ஆதாரங்களுடன் பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளி ஆகியவற்றை  071 9090900 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு பொதுமக்கள் உடனடியாக தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
முந்தைய செய்தி அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி
அடுத்த செய்தி வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பருத்தித்துறையில் போதை ஒழிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம்

நவம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 30 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நவீன சந்தையாக மாறிய பருத்தித்துறை சந்தை

நவம்பர் 13, 2025
இலங்கை

அதிஷ்டம் கிடைத்துள்ளதாக வடமராட்சியில் முதியவர்களிடம் பெருந்தொகை பணம் மோசடி.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?