Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா குப்பை மேட்டுபிரச்சனை – பிரதியமைச்சர் தலைமையில் ஆராய்வு

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா சாலம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாலம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.

நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாலம்பைக்குளம் புதிய வீட்டு திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுர்தீன், அரசாங்க அதிபர், சுற்றாடல் அதிகார சபையினர், வவுனியா மாநகர சபை ஆணையாளர், தமிழ் பிரதேச சபை தலைவர் உட்பட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு இது தொடர்பான உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – வீடொன்று சேதம்
அடுத்த செய்தி அரச அலுவலகங்களுக்கு புதன்கிழமை விடுமுறை இரத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஏப்ரல் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஊடகவியலாளர் நிலக்சனுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அஞ்சலி

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு,ஒருவர் பலி!

செப்டம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?