வட்டுக்கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
