லிபியாவில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தலைநகர் திரிப்போலியில் இருந்து கிழக்கே சுமார் 118 கி.மீ தொலைவில் உள்ள கடலோர நகரமான அல் கும்ஸுக்கு அப்பால் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நால்வர் உயிரிழந்த நிலையில் எஞ்சியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் முதலுதவி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
