வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் வவுனியா பாவற்குளம் படிவம் 03, அரசடிக்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்திற்கான சிமாட் வகுப்பறைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்ததுடன், மைதான புனரமைப்பினையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
23 லட்சம் ரூபா மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி மனோகரன் கேதீஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான இசையாஸ்மிறால், தர்மபாலன் மற்றும் கிராம சேவையாளர் அஸ்லாம், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
