Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் குடாரப்பு பகுதியில் தொடரும் சட்ட விரோத மணல் அகழ்வு

அக்டோபர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , குடாரப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ள நிலையில் , அப்பகுதிக்குள் கடல் நீர் உட்புக கூடிய அபாயம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் மாமுனை பகுதியை சேர்ந்த நபர்களுடன் பொலிஸார் நட்புறவுடன் காணப்படுவதால் , அவற்றை தடுக்க பொலிஸார் முன் வருவதில்லை எனவும் , தினமும் 08 டிப்பர் மண் அப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட விரோத மணல் அகழ்வுகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ந்து பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற போதிலும் , அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் காணப்படுகிறது.

மணல் அகழ்வு பொலிசாரின் துணையுடன் நடைபெறுவதாகவும் , மணல் அகழ்வுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் கிடைப்பதால் , அவர்கள் தப்பி செல்கின்றனர் என பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு நேரில் சென்று , மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை பார்வையிட்டதுடன் , மணல் அகழ்வு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பிலான விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையிலும் தொடர்ந்து சட்ட விரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை சட்டவிரோத மதுபான உற்பத்திகளும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

முந்தைய செய்தி வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவு
அடுத்த செய்தி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்!

ஜூலை 30, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது…

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார்!

டிசம்பர் 14, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நகரத்திற்கான பிரச்சாரப் பணியை ஆரம்பித்தது கோடாரி சின்ன சுயேட்சைக் குழு….

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?