கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 9,200 சட்டவிரோத சிகரெட்டுகளை சுங்கவரியின்றி நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதரை காவல்பிரிவுக்குட்பட்ட துறைமுகத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கதிர்காமம் மற்றும் புளூமெண்டல் பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதரை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
