பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனமும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் ஒன்று இன்று ஹட்டன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம், அவர்களின் இருப்பு, தொழிற்சங்கங்களின் நிலை, பெருந்தோட்டத் தொழில் துறையின் எதிர்காலம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், பெரும்பான்மை சமூகம் வாழ்கின்ற பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிரத்தியேகமாக அனுபவிக்கும் இன்னல்கள் குறித்தும் இங்கு கருத்தில் கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாத நிலையில், தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்கும் புறநகர்ப் பகுதிகளுக்கும் தொழில் நிமித்தம் செல்வதாக இதன்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
