யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார்.
அந்நிலையில் அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
