Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழந்த சம்பவம் -கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!

ஆகஸ்ட் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரண இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மூத்த சட்டத்தரணி கெங்காதரன் அவர்கள் உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான சமர்ப்பணங்களை முன்வைத்தார்

இந்த வழக்கின் இராணுவத்தினருக்கான பிணைகோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த நான்கு இராணுவத்தினரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு இராணவத்தினருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணையும் இவர்கள் சாட்சியங்களை அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதிஇன்றி வெளிநாட்டு பயணங்கள் செல்லமுடியாது என்று மன்று அறிவித்து பிணை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை 30.09.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

முந்தைய செய்தி யாழ் மண்டைதீவு படுகொலை நினைவேந்தல் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி ஒட்டாவா நகரசபை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ ஊராட்சி முற்றம்’ மகளிர் குரல் கூட்டம்!

பிப்ரவரி 19, 2025
இலங்கை

வனவிலங்கு சரணாலயத்தில் திடீர் தீ விபத்து!

ஆகஸ்ட் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை பிரச்சனையை 06 மாத காலத்திற்குள் முடிப்போம் – சிவசேனை உறுதி

பிப்ரவரி 24, 2025
இலங்கை

யாழில் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?