யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் மீனவர்கள் மத்தியில் இடம்பெற்ற முறுகலை தொடர்ந்து நேற்று(7) இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தவர்களை அகற்றும் செயற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந் நடவடிக்கையின் போது மீனவர்களுக்கிடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, (7)நேற்று இரவு செம்பியன்பற்று பகுதியில் உள்ள கரைவலை வாடி ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது
இதனால் இரண்டு லட்சம் பெறுமதியான கடல் தொழில் உபகரணங்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
