நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் மழை தொடர்பான எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, காலி, மாத்தறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதட்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருக்கோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசக் கூடுமென கூறப்பட்டுள்ளது.


