வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த தன் பெற்றோருக்கு குடை கொண்டு சென்ற வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
