வறுமைக் கோட்டிற்குட்பட்ட 123 மாணவர்களிற்கு வவுனியாவிலுள்ள இரு பாடசாலைகளின் தாய்சங்க பழைய மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய பிரித்தானிய பழைய மாணவர்கள் இணைந்து நடாத்திய மாறா நைட் 2025 நிகழ்வில் தேறிய பணத்தின் ஒரு பகுதியினை வறுமைக்கோட்டிகு உட்பட்ட தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பாதணிகள் வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கமைய 1ம் கட்டமாக செட்டிகுளத்திலே நீலியாமோட்டை 20, துட்டுவாகை 74, கப்பாச்சி 29 ஆகிய 03 பாடசாலைகளிற்கு வவுனியாவிலுள்ள இரு பாடசாலைகளின் தாய்சங்க பழைய மாணவர்களும் இணைந்து குறித்த பாதணிகளை வழங்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மற்றும் இறம்பைக்குளம் மகா வித்தியாலய தாய் சங்க பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
