Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் எதிர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் – பா.உ.எம்.ஜெகதீஸ்வரன்

மார்ச் 16, 2026
படிக்க 4 நிமிடங்கள்
SHARE

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சீரான முறையில் நாட்டு மக்களுக்கு எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் எதிர் கட்சியினர் சிறு பிள்ளை தனமாக கருத்துக்களை முன் வைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பதற்ற மடைந்து அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்கவும், செயற்கையான தட்டுப்பாட்டை தடுக்கவும் நேற்று முதல் QR முறையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை அடுத்த மூன்று நாட்களுக்கு இ.போ.ச (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.வடமாகாணத்தில் அரச அதிபர் பணிமனைக்கு அருகே உள்ள எரிபொருள் நிலையங்களில் பேருந்துகளுக்கு டீசல் வழங்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாய நடவடிக்கைகளுக்காக வாரத்திற்கு 25 லிட்டர் எரிபொருள் டிராக்டர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா போன்ற மாவட்டங்களில் சிறுபோக பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை பணிகள் நடைபெறுவதால், மேலதிக எரிபொருள் தேவை குறித்து ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற அந்த நாடுகளிலே மக்கள் பாரிய வரிசையிலே எரி பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய நாட்டிலே நாங்கள் அவற்றை சரியான முறையில், QR நடைமுறையினூடாக மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வழங்க இருக்கிறோம்.

அத்தோடு வரும் வாரங்களில் வரிசையிலே அவ்வாறு இருக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படின், அந்த வரிசையிலே நின்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறோம். குறிப்பாக அவர்களுக்குரிய மலசலகூட வசதிகள், அதேபோல் அவர்கள் வெயிலில் நிற்காத வகையிலே ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், வடக்கு மாகாணத்தில் உள்ள அரசாங்க அதிபர்கள் தலைமையிலே உடனடியாக நாங்கள் ஒரு கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்திருக்கின்றோம். வவுனியா மாவட்டத்திலே கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது.

அதேபோல நாளை தினம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற இருக்கின்றது. இந்த எரிபொருள் சார்ந்த தொடர்புடைய போக்குவரத்துத் துறை சார்ந்தவர்கள், அதேபோல் பிரதேச செயலாளர்கள், ராணுவத்தினர், பொலிஸார் உட்பட அனைவரும் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டு, மாவட்ட ரீதியாக ஏற்படுத்த இருக்கின்ற விசேட செயற்றிட்டங்கள் தொடர்பாக கலந்துரையாட இருக்கின்றோம்.

எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் பீதி அடையாமல் தங்களுக்குரிய எரிபொருட்களை நீங்கள் அங்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். தொடர்ச்சியாக எரிபொருட்களை வழங்குவதற்கு சீனா, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாதகமான சமிக்ஞைகள் கிடைக்க பெற்றிருக்கின்றன. எனவே அந்த நாடுகளிலிருந்தும் இவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்தியாவிலிருந்து வரவிருக்கின்ற இரண்டு கப்பல்கள் மின்சார உற்பத்திக்கு தேவையான ஆயில்’ (Crude Oil) அவற்றினைப் பெற்றுத் தருவதாக இந்தியா கூறியிருக்கின்றது. அவற்றை ஏற்கனவே கொள்வனவு செய்வதற்கு உரிய அனைத்து விதமான நடவடிக்கைகளும் செய்திருக்கின்றோம். உலகின் இந்தப் போர் நடைபெறுகின்ற போக்கு சற்று வித்தியாசமாக இருப்பதனால், வரும் காலங்களிலே நாங்கள் விசேட மாற்றங்களை இந்த எரிபொருள் வழங்குவதில் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

நிச்சயமாக இது தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு நாங்கள் மக்களுக்குத் தேவையான இந்த எரிபொருளை விநியோகிக்க தயாராக இருக்கிறோம். அத்தோடு மீனவர்களுக்கு தேவையான அவர்களின் படகு களுக்குத் தேவையான மண்ணெண்ணெய் விநியோகத்தையும் சீர்படுத்த கூடிய வகையிலே நாங்கள் ஒழுங்குகளை மேற் கொண்டிருக்கின்றோம்.

எரிபொருள் குறித்து எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு

இந்த எரிபொருள் தொடர்பாக, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஏதோ வேற்று கிரகத்திலிருந்து அல்லது வேறு உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டு கின்ற நிலைப்பாடு இருக்கிறது.

இவர்களுக்குப் புரியவில்லையா? உலகிலே ஒட்டுமொத்தமான நாடுகளுமே, முழு உலகமுமே இந்த எரிபொருள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. இலங்கை மட்டுமல்ல. இவர்கள் ஒரு சந்தர்ப்பவாதத்தை இங்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்களுடைய இந்தச் சந்தர்ப்பவாதம் எடுபடப் போவதில்லை. மக்களுக்குத் தெரியும், மக்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் இது ஒட்டுமொத்தமான உலகத்திற்கான ஒட்டுமொத்த பிரச்சனை. இவர்கள் தங்களுடைய ஒரு கீழ்த்தரமான, மலிவான அரசியலை மேற்கொள்வதற்காக இவ்வகையாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுடைய செயல்பாட்டின் காரணமாகத்தான் இந்தப் போதைப்பொருள் மிகவும் மோசமான நிலையிலே இலங்கையிலே வியாபித்திருக்கின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறியபடி, போதைப்பொருளை முழுமையாக இந்த நாட்டிலிருந்து அழித்தொழிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் ஜனாதிபதி தலைமையிலே விசேட செயற்திட்டங்களூடாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

முந்தைய செய்தி நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் – கடற்தொழில் அமைச்சர்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 7 பேர் உட்பட 10 பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளராக முகுந்தன் கடமையை பொறுப்பேற்றார்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

நவம்பர் 12, 2025
இலங்கை

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞனுக்கு ஒரு இலட்ச ரூபாய்

டிசம்பர் 11, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

கலை இலக்கிய நிகழ்வும் மாருதம் சஞ்சிகை வெளியீடும்

பிப்ரவரி 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?