“3” திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்.
இவர் கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கியதுடன், லால் சலாம் படத்தையும் இயக்கினார்.
தற்போது தன்னுடைய 4 வது படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். இந்த படத்தை ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிப்பதோடு, படத்திட்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் நடிக்க போகும் நடிகர், நடிகையர் தொடர்பிலான தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.
