அங்கும்புர – அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மண்சரிவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள போதிலும், அது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிவாரணக் குழுக்களால் அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலவத்துகொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
