வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இன்றையதினம் வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இதற்கு முன்னர் பொலிஸ் தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிகளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
