நீதிமன்ற வளாகத்தில் குவிந்து கிடக்கும் வழக்கின் சான்றுப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அகற்ற வேண்டும் என நீதிச் சேவை ஆணைக்குழு சுற்றுநிருபம் ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதன் சிரேஸ்ட உதவிச் செயலாளர் டி.எம்.ஜே. திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த சுற்றுநிருபத்தில் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 வரை, வார இறுதி நாட்களிலோ அல்லது பொது விடுமுறை நாட்களிலோ, மீண்டும் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்தப் பணியில் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
