தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் இன்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ. ரஜீவன் , மற்றும் மருத்துவர் ச, சிறிபவானந்தராசா, தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.