மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 14 வயதுடைய மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயின் 2 ஆவது கணவர் மற்றும் தனியார் விடுதி ஒன்றின் முகாமையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவர் குறித்த பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் குறித்த மாணவியின் தாயின் 2 ஆவது கணவர் என குறிப்பிடப்படும் நபர் குறித்த மாணவியை பாடசாலை மாணவர் விடுதிக்கு சென்று நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த நபர் குறித்த மாணவியை தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று குறித்த சிறுமியின் தந்தை என கூறி அறை ஒன்றை பெற்று தங்கிய நிலையில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்தவற்றை பாடசாலை விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்த நிலையில் குறித்த சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் மற்றும் விடுதியின் முகாமையாளர் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மன்னார் நகரில் பல்வேறு தனியார் தங்கு மிட விடுதிகள் காணப்படுகின்றது. குறித்த விடுதிகள் எவ்வித கண்காணிப்புகளும் இன்றி காணப்படுகிறது.
இவ் விடுதிகளில் 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகள் அழைத்துச் செல்லப்படுகின்ற நிலையில் விடுதியின் முகாமையாளர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தங்குவதற்காக அனுமதிப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் உள்ள விடுதிகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.