கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கூறுவது, தமிழக கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.வி.சுப்பிரமணியம் இந்த குற்றச்சாட்டை இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது முன்வைத்தார்.
அத்துடன், விஜய்யின் கருத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் உரிய பதில் வழங்கியதையும் அவர் வரவேற்றுள்ளார்.
