மஹரகம, நாவின்னவில் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
