வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு முற்றுகையிட்ட பொலிசார் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபரி ஒருவரை, 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணியளவில் பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ளு போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபரியை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
