நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற WTC எனும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க கோப்பையை வென்றது.
இதன் மூலம், 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை தென்னாபிரிக்கா அணி வென்றுள்ளது.
மேலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற 3வது அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றுள்ளது.
(Temba Bavuma) தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி 10 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது இதன் மூலம் தோல்வியே காணாத தென்ஆப்பிரிக்க கேப்டன் என்ற பெருமையை டெம்பா பவுமா பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் கறுப்பினத்தவர் பாகுபாடு நிலவுவதால், கிரிக்கெட் அணியில் 6 பேர் வெள்ளை இனம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
இடஒதுக்கீடு இருப்பதால் தான் கோப்பையை வெல்ல முடியவில்லை என தென்னாபிரிக்கா அணி மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு டெம்பா பவுமா WTC கோப்பையால் பதிலடி கொடுத்துள்ளார்.