கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் காணொளி அழைப்பு ஊடாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காணொளி அழைப்பு ஊடாக கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.