ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி திருமதி செவரின் சபாஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
அதன்படி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் திறன் மேம்பாட்டிற்காகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பாடு தெரிவித்தது.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
இன மத பேதமின்றி, ஒரே இலங்கை தேசமாக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லும் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக “Sri Lankan Day” கொண்டாட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான 60 ஆண்டுகால நட்பை வலுப்படுத்தி, தொடர்ந்து பேணுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றும் சிறப்பான பங்களிப்பிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.