யாழ்ப்பாண கடற்கரைகளில் இறந்த நிலைகளில் ஆமைகள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் பத்திற்கும் மேற்பட்ட ஆமைகள் அவ்வாறு கரையொதுங்கியுள்ளன.
காரைநகர், வடமராட்சி பகுதிகளில் ஏற்கனவே இறந்த நிலைகளில் ஆமைகள் கரையொதுங்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காங்கேசன்துறை கடற்கரை பகுதிகளில் மூன்று ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன.