மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி ஒன்றை மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(17) காலையில் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக கடற்படையினரும் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளில் மர்மான பொருட்கள் மற்றும் ஆளில்லாத படகுகள் டொல்பீன்கள் போன்றவை கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.