Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – ஐந்து பேர் பலி! அவசர நிலை பிரகடனம்.

ஜனவரி 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். காட்டுத்தீ காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காட்டுத்தீயால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு (புதன்கிழமை) காற்றின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று (வியாழன் கிழமை) வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறையினர் கூறும் போது, “எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், இத்தகைய காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீயணைப்பு வீரர்கள் அனைத்து துறைகளிலும் இல்லை,” என்று தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு.
அடுத்த செய்தி ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் !

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

டெக்சாஸில் நிலநடுக்கம்

மே 4, 2025
உலகம்

தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மலேசியா மத்தியஸ்தம்!

ஜூலை 27, 2025
உலகம்

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 30பேர் படுகாயம்!

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?