ஓமான் இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், சுமார் 5 கோடி ரூபா (இந்திய ரூபாவில்) மதிப்புள்ள, 1.20 கோடி முட்டைகள் அடங்கிய கப்பல் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஓமானின் அறிவிப்பால் முட்டை ஏற்றுமதி மேலும் பாதிக்கும் அபாயமுள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டார் அரசு எடை குறைந்த இந்திய முட்டைகளுக்குத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ஓமானும் இந்திய முட்டை இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.