டி 20 லீக் தொடரின் சையத் முஷ்டாக் அலி கிண்ண தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் பரோடா அணி சாதனை படைத்துள்ளது.
முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.
சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி, 81 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.