+1 514-800-2610

ரசிகர்களுக்கு 1 கோடி ரூபா வழங்கும் விஜய் தேவரகொண்டா !!

2023-09-05 02:50
சினிமா செய்திகள்

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ''குஷி''.

இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை எங்கள் குடும்பங்களுக்கு தருகிறேன்.

அடுத்த பத்து நாட்களில் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்குவேன்.

தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்தத் தொகை வழங்கப்படும்.

அப்போது தான் குஷியின் வெற்றி எனக்கு முழுமையடையும் என்று பேசினார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி