+1 514-800-2610

இன்று 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ள ஆதித்யா எல் -1 !!

2023-09-02 02:46
இந்திய செய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்து உள்ளது.

சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவுவதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி