+1 514-800-2610

போலி நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது!

2023-08-24 18:30
கனடிய செய்திகள்
கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட  நிரந்தர வதிவிட அட்டைகளுடன்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த இருவரையும் கைது செய்துள்ளது.

போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர பதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பெருந்தொகையான  அட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயிலில்  இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து 10,000 டொலர்  பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நிதிச் சலவையில் ஈடுபட்டனரா?  என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி