+1 514-800-2610

பாகிஸ்தானில் லொரி மீது மோதி பேரூந்து தீப்பிடித்தது- 16 பேர் பலி

2023-08-20 09:34
உலகச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி அதிகாலை பயணிகள் பேரூந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பேரூந்து, பஞ்சாப் மாகாணம் பிண்டி பட்டியன் அருகே பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது டீசல் ஏற்றி சென்ற லொரி மீது மோதியது.

இதில் பேரூந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.

15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி