+1 514-800-2610

மாநகரசபைக்கான இழுவை வாகனம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் !!

2023-08-09 08:37
கியூபெக் செய்திகள்

றமோன்ட்-ராயல் நகரில் தெருவைக் கடக்கும் பொது மாநகரசபைக்கு சொந்தமான இழுவை வாகனம் தாக்கியதில் இரண்டு வயோதிபர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கிளைட் சாலை மற்றும் டிரெஸ்டன் அவென்யூ சந்திப்பில் இருவர் மீது வாகனம் தாக்கியுள்ளதாக பொலிஸிற்கு அழைப்பு வந்தது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திக்கு விரைந்த பொலிஸ் படுகாயங்களுடன் கணவன் மற்றும் மனைவி இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் .

இந்நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன் கணவன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்னும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி