20 ஆண்டுகளுக்குப் பின் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!
2003 ஆம் ஆண்டு முதல் பார்த்தசார்த்தி கபூர் என்னும் 49வயதுடையவர் , மொன்றியலின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் மாவட்டத்தில், ஏழு முதல் 14 வயது வரையிலான நான்கு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால், அவரைத் நீண்டகாலம் தேடிய பின்னர், இறுதியாக அவரைக் கைது செய்ததாக மொன்றியலின் பொலிசார் தெரிவித்துள்ளனர்
1998 மற்றும் 2003 க்கு இடையில், கபூர் தனது வீட்டிற்கு சிறுவர்களை கவர்ந்திழுத்து, பின்னர் அவர்களை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கபூர் மறைந்து இறுதியில் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றிருந்தார்
ஜனவரி 2020 இல், அவர் தனது சொந்த நாடான இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அமெரிக்காவில் செய்யப்பட்ட பாலியல் குற்றங்களுக்காக அந்த மாநிலத்தில் 97 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
இதேவேளை கனடிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கபூர் கனேடிய எல்லைக்கு அருகில் கொண்டு வரப்பட்டார், அங்கு SPVM அதிகாரிகள் அவரை ஆகஸ்ட் 4 அன்று கைது செய்தனர்.
அவர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மொன்றியல் நீதிமன்றத்தில் ஆஜரானார், அங்கு அவர் பாலியல் இயல்பின் குற்றங்களுக்காக "பல குற்றச்சாட்டுகளை" எதிர்கொண்டார், குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் தயாரித்தல் உட்பட, பல குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன
மேலும் புலனாய்வாளர்கள் கபூரின் வழக்கைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகுமாறு அல்லது 514-393-1133 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அல்லது வழக்கில் பணிபுரியும் குழுவைத் தொடர்புகொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.