மொன்றியலில் உள்ள 'மேஜிக் காளான்' கடை மூன்றாவது முறையாக தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. !!
2023-08-04 08:22
கனடிய செய்திகள்
`FunGuyz' என்ற மாயக் காளான் கடை ஒரு மாதத்திற்கு முன்பே திறக்கப்பட்டதிலிருந்து மொன்றியல் பொலிஸ் அதிகாரிகள் மூன்றாவது முறையாக சோதனையினை மேற்கொண்டனர்.
மொன்றியல் கான்ஸ்டபிள் ஜூலியன் லெவெஸ்க், வில்லே-மேரி பரோவில் உள்ள பாபினோ அவென்யூவிற்கு அருகிலுள்ள ஒன்டாரியோ ஸ்ட்ரீட் கடைக்கு அதிகாரிகள் சென்றதாகவும் குறித்த இடத்தில் 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூன்றாவது தேடுதலின் போது போதைப்பொருள் தொடர்பான பிற பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.