பிரபல சமூக வலைதளமான Twiter வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் Twiter தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, Twiterரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் எலன் மஸ்க் இன்று வெளியிட்ட Twiter பதிவில், "விரைவில் நாங்கள் Twiter brand, படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம்.
நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்று கூறினார். வர்த்தக குறியீடாக உள்ள Twiter என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Twiter தளம் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.