+1 514-800-2610

ஐந்து கியூபெக் க்ரீ சமூகங்கள் காட்டுத்தீ காரணமாக வெளியேற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர் !!

2023-07-18 06:39
கனடிய செய்திகள்

வடக்கு கியூபெக் முழுவதும் காட்டுத் தீ தொடர்வதால், தற்போது பல இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

"காட்டுத் தீயின் நிலைமை மிகவும் தீவிரமானதாக உள்ளதாக ஈயோ இஸ்டிச்சியின் க்ரீ நேஷனின் கிராண்ட் சீஃப் மாண்டி குல்-மாஸ்டி  தெரிவித்தார்.

மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜேம்ஸ் பேக்கு மேற்கே உள்ள க்ரீ பகுதியில் அண்மையில் மழை ஓரளவு பெய்துள்ளதால் ஓரளவுக்கு காட்டுத்தீ குறைவடைய வாய்ப்பளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் மக்கள் தொடர்ச்சியாக இடம்மாற்றம் செய்யப்பட்டுவருவதாக பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், இப்பகுதியில் உள்ள பில் டயமண்ட் நெடுஞ்சாலை, பிராந்தியத்தில் ஏற்பட்ட  தீ மற்றும் புகையின் காரணமாக சுமார் 2,000 பேர் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புகைமூட்டம் காரணமாக, வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடிய 500 பேரை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக குல்-மாஸ்டி தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி