பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 11 நாட்களாக துறைமுக பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொழில் தருனர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நிலவிய கருத்து முரண்பாடுகள் காரணமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு தொழில் தருனர் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த 13 நாட்களாக நீடித்து வந்த வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 7,400 உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு 500 மில்லியன் டொலர் பெறமதியான பொருள் விநியோகச் சங்கிலியை பாதித்திருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.